அலங்காநல்லூர்.
ஜூன்.25 –

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில்தமிழக முதல்வர் ஜோசப்விஜய்அவரின் 52 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் விஜய்ஹரிஷ், தலைமை தாங்கினார் முன்னிலை பேரூர் செயலாளர் தளபதிரஞ்சித், பேரூராட்சி முன்னாள்சேர்மன்
கீதாபாலாஜி, முன்னிலை வகித்தனர்.

இதில் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, கலந்து கொண்டு முதலமைச்சர் விஜய் பெயரில் ஸ்ரீ முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின்னர் வாடிவாசல் பகுதியில் 52 கிலோகேக் வெட்டி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்களுக்கு பேரூராட்சி முன்னாள் சேர்மன் கீதாபாலாஜி, வீரவால் வழங்கினார்.


ராசுஆசாரி மண்டபத்தில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாகி விக்கிப, மற்றும் பிரதீப் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தொடர்ந்து 11 வார்டு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழாவில் ஒன்றிய செயலாளர் ஹரிஷ் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இவ்விழாவுக்கான ஏற்பாடு வார்டு செயலாளர் வைகை வசந்தன், செய்திருந்தார்.


சின்னஊர்சேரிகிராமத்தில் அமைந்துள்ள ஐ.எஸ்.ஏ.குழந்தைகள் காப்பகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது தொடர்ந்து குழந்தைகளுக்கு அசைவ உணவு அன்னதானமும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் வடக்கு ஒன்றிய நிர்வாகி தனசேகரன் செய்திருந்தார்.


மணியஞ்சி கிராமத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளைநிர்வாகி முத்துக்குமார் செய்திருந்தார்.வலசை கிராமத்தில் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் வார்டு செயலாளர் தங்கராஜ்,மற்றும் சுரேஷ், மதன், மகளிரணி திலகவதி,உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆதனூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாகிவீரணன் செய்திருந்தார். முடுவார்பட்டி கிராமத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கோவிலில்
முதலமைச்சர் ஜோசப்விஜய் பெயரில் சிறப்புக்கு பூஜைகள் செய்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகள் கிளை தலைவர் விஜய்கருப்பு, செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் விஜய் விவேக் மற்றும் பூமிநாதன்,செய்திருந்தனர்.


பாறைப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்குகல்வி உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கிளைச் செயலாளர் ராஜேந்திரன்,மற்றும் நிர்வாகிகள் விமல், முருகன்,ராமசந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர். மறவபட்டி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ராஜா செய்திருந்தார். இதில் மாநில வழக்கறிஞர் பிரிவு தியாகு,வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் தாமு,இணைச் செயலாளர் ராமநாதன், ஆர்த்தி வெங்கடேசன், நிர்வாகிகள் வெள்ளைகங்கை,ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *