நாகப்பட்டினம்,ஜூன்.25-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன.
இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் திருக்கண்ணபுரம் மற்றும் ராதாரம்பூர் கிராமங்களில் உள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்த இந்த நிலத்தை மீட்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில் இணை ஆணையர் வழிகாட்டுதலின் படி உதவி ஆணையர் ராஜா இளம்பெருவழுதி தலைமையில் தனி வட்டாட்சியர் (கோயில் நிலங்கள்) ஜெயபாலன், கோயில் செயல் அலுவலர் (பொ) முருகன், சரக ஆய்வாளர் சதீஸ் மற்றும் வருவாய் துறையினர், கோயில் பணியாளர்கள், போலீசார் ஆகியோர் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டனர்.
இதன் மதிப்பு ரூ.2 கோடி என தெரிவித்தனர். தொடர்ந்து அந்த இடத்தில் சௌரிராஜப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் பதாகை வைக்கப்பட்டது.