அரியலூரில் சிஐடியு மறியல் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது தொழிலாளர் விரோத சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு வழங்கிட வேண்டும் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் ஆண்டுக்கு 200 நாள் வேலை தினசரி கூலியாக ரூ 700 சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் தமிழ்நாடு விவசாய சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவைகள் இணைந்து மறியல் போராட்டம் நடத்தினர்

அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி மாவட்ட செயலாளர் கந்தசாமி விச துணைத்தலைவர் மணியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் எம் இளங்கோவன் போராட்டத்தை துவக்கி வைத்து போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார் இதில் சிற்றம்பலம் ராஜாமணி கிருஷ்ணன் அழகுதுரை முருகன், சத்தியமூர்த்தி ஆதிலட்சுமி செல்வராஜ் வரப்பிரசாதம் நாகராஜ் தேவதாஸ் செல்லப்பிள்ளை கருப்பையா முருகன் சாமிக்கண்ணு சுத்தமல்லிகோவிந்தராஜன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதானார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *