தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கண்காணிப்புக் குழு கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக் குழு விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா பெரியகுளம் சபரி ஐங்கரன் மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம் கூடுதல் ஆட்சியர் ரஜத்பீடன் மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் நலக்குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்