புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு

புதுக்கோட்டை: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள், ஊராட்சி செயலாளர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி, நிறுவனத் தலைவராக கோவை ஆர். ரங்கராஜ், மாநிலத் தலைவராக புதுக்கோட்டை ஏ. மணிராஜ், மாநில செயல் தலைவராக தேனி பொட்டு முருகன் என்ற முருகேசன், மாநில பொதுச் செயலாளராக விழுப்புரம் எஸ். ராஜ்குமார், மாநில பொருளாளராக ராமநாதபுரம் என். நாகேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், தலைமை நிலைய செயலாளராக திருவண்ணாமலை பி. செந்தில்குமார், மாநில அமைப்புச் செயலாளராக கடலூர் கே. அன்பழகன், மாநில ஒருங்கிணைப்பாளராக நாகை பி. சாக்ரடீஸ், மாநில செய்தித் தொடர்பாளர் மற்றும் தகவல் தொடர்பு செயலாளராக திருவாரூர் கே. இரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில துணைத் தலைவர்களாக திருச்சி எஸ். சோமசுந்தரம், கள்ளக்குறிச்சி க. மணி, வேலூர் என். உமாபதி, விருதுநகர் எம். ராஜன் ஆகியோரும்,

மாநில இணைச் செயலாளர்களாக சிவகங்கை ஏ. முத்துச்செல்வம், எஸ். செல்வம், மதுரை கே. கதிரேசன், தஞ்சை எல். மாரிமுத்து ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனுடன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளின் தேர்வுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் சங்கத்தின் வளர்ச்சிக்கும், ஊராட்சி செயலாளர்களின் நலனுக்கும் தொடர்ந்து பாடுபடுவதாக தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *