தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டம் 2024-25 கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அத்துடன், வ.உ.சி. துறைமுக கழகத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் பெறப்பட்டுள்ள ரூ. 1.56 கோடி மதிப்பிலான செவித்திறன் குறைபாடு கண்டறியும் கருவிகளையும், ரூ. 20 லட்சம் மதிப்பில் பச்சிளம் குழந்தைகளுக்கு வெப்பமூட்டும் கருவியையும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.