பொள்ளாச்சி –
ஆக – 10

பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் புதூர் பகுதியில் தமிழ்நாடு டயர் ட்யூப் பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொழிலை நம்பி உள்ளனர் எனவே. தமிழ்நாடு அரசு தங்களுக்கென ஒரு நலவாரியம் அமைக்க வேண்டும். இந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் பல்வேறு அரசு நல திட்டங்கள் எங்கள் தொழிலாளர்களையும் வந்தடைய வேண்டும். நெடுஞ்சாலைகளில் பணியில் ஈடுபடும்போது காவல்துறையும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு வழங்க வேண்டும். பழுது பார்க்கும்போது விபத்து ஏற்பட்டால் உரிய காப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எங்களது தொழிலை சிறு குரு தொழில் என கருதி வங்கி கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடமாடும் பஞ்சர் பழுது பார்க்கும் வாகனங்களுக்கு வரி சலுகை செய்ய வேண்டும், உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் சுரேஷ் பொள்ளாச்சி தலைவர் சக்திவேல் செயலாளர் ராதாகிருஷ்ணன் மாநில நிர்வாகி அப்துல் கபூர் புதுச்சேரி நிர்வாகி கருப்பசாமி முருகன் ராதாகிருஷ்ணன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *