ஈரோடு தொழிலதிபர் SKM. மயிலானந்தம் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது…

சிறந்த சமூக சேவைக்காக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
வழங்கினார்…

ஈரோடு. ஜூன். 26

பல்வேறு சமூக சேவை பணிக்காக ஈரோடு தொழிலதிபர் skm மயிலானந்தம் அவர்களுக்கு மத்திய அரசின் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.

ஈரோட்டில் புகழ்பெற்ற எஸ் கே எம் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த எஸ் கே எம் குழுமத்தின் தலைவராக skm மயிலானந்தம் அவர்கள் இருந்து வருகிறார்.

இவருடைய முந்தைய பெயர் எஸ்.கே மயில்சாமி கவுண்டர் என்றுதான் இருந்தது. சாதி பெயர்களை தங்களின் பெயர்களோடு சேர்த்து இருப்பதை அறிந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒரு முறை ஈரோட்டில் நடைபெற்ற ஒரு விழாவில், எஸ் கே எம் குழுமத்தின் தலைவர் எஸ் கே மயில்சாமி கவுண்டர் இடம் தங்கள் பெயரில் உள்ள கவுண்டர் என்ற சாதி பெயரை எடுத்து விடுங்கள் என்று, இதனை உங்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள் ஆக வைக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து எஸ் கே மயில்சாமி கவுண்டர் என்ற தனது பெயரை, ஜாதி பெயர் இல்லாமல் இருக்கும் வகையில், எஸ் கே மைலானந்தம் என்று அவர் மாற்றிக் கொண்டார்.

அன்று முதல் அவர் எஸ்கே மயிலானந்தம் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக, ஈரோடு காளை மாட்டு சிலை அருகே அவருடைய அலுவலகம் பெரிய அளவிலான அரங்கம் அமைத்து அங்கு மறைந்த அருள்மிகு வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களின் சீடராக இருந்து, மனவளக்கலை மன்றம் என்ற பெயரில் பொதுமக்களுக்கான பயிற்சி மையத்தை நிறுவி இன்று வரை நடத்தி வருகிறார்.

கோவை மாவட்டம் ஆழியார் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் ஆழியார் அறிவு திருக்கோவிலில் மறைந்த ஐயா வேதாத்திரி மகரிஷியின் நேரடி சீடராக பணியாற்றி ஐயா வேதாத்திரி மகரிஷி அவர்களின் பல்வேறு பயிற்சிகள் மற்றும் மக்களுக்கு தேவையான பொது அறிவுரைகளை நேரடியாக பெற்று அதனை தன்னுடைய ஈரோடு மனவளக்கலை மன்றம் மூலமாக ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அவர் வழங்கி வருகிறார்.

இந்த ஈரோடு மனவளக்கலை மன்றம் என்பது மறைந்த ஐயா வேதாத்திரி மகரிஷியின் ஆசியோடு மயிலானந்தம் ஐயா அவர்களின் நேரடி மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.

இந்த மனவளக்கலை மன்றத்தில் காயகல்ப பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி முறைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியில் முறையாக ஒவ்வொரு பதவி உயர்வுகள் பெற்று சிறந்த பயிற்சி எடுத்த பொதுமக்களுக்கு பட்டம், விருது, பயிற்சி அளிக்கும் தலைமை பண்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் உள்ள அனைத்து பயிற்சிகளிலும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயிற்சி எடுக்கும், அவர்களுக்கான மனம் சார்ந்த பிரச்சினைகள், உடல் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்பது சாத்தியப் படக்கூடிய ஒன்று.

இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து ஈரோடு மனவளக்கலை மன்றத்தில், பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு பயன் பெற்று வருகின்றனர்.

மேலும் எஸ் கே மயிலானந்தம் அவர்கள் தன்னுடைய பொது சமூக அறக்கட்டளையின் மூலமாக பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.

இதன் அடிப்படையில் சமூகத்திற்கான சிறந்த சேவைகளை செய்து வரும் ஈரோடு எஸ் கே மயிலானந்தம் அவர்களை கௌரவப்படுத்தும் வகையில், மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூசன் விருது அவருக்கு வழங்கி மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தொழிலதிபரும், சிறந்த சமூக சேவகருமான எஸ்.கே.எம் மயிலானந்தம் அவர்களுக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.

இந்த உயரிய பத்மபூஷன் விருதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வழங்கி எஸ் கே எம் மயிலானந்தம் அவர்களை கௌரவப்படுத்தினார்.

இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருது பெற்ற ஈரோடு தொழிலதிபர், சமூக சேவகர் எஸ் கே மயிலானந்தம் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *