தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் வட்டாரத்தில் 73 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்.
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டாரத்தில் இன்று 73 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.குண்டடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமை ருத்ராவதி பேரூராட்சி தலைவர் மோகன்ராஜ் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கே. ஸ்ரீ சுகு, குண்டடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கீர்த்தனா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், வட்டார சமுதாய நல செவிலியர் கனகவல்லி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அதிகாலை முதலே பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து ஆர்வமுடன் போலியோ சொட்டு மருந்து செலுத்தி பயனடைந்தனர். குண்டடம் வட்டாரத்தில் மொத்தம் 73 மையங்களில் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.