வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர் ஜீன்-29
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள “ஜான் ஹோட்டல் மீட்டிங் ஹாலில் சங்கரன் கோவிலை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும்”தமிழ்நாடு புதிய கரங்கள் அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்கம்” துவக்க விழா மற்றும் முதல் செயற்குழு கூட்டம் 28/06/2026 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.”தமிழ்நாடு புதிய கரங்கள் அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்க மாநில துணைத்தலைவர் துறையூர் ராஜலட்சுமி (திருச்சி) தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாநில தலைவர் கோவை பாலமலை ரெங்கநாதன் ஆலோசனை பேரில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் மாநில செயலாளர் ஸ்ரீவில்லிப்புத்தூர் சந்தியாகு, பொருளாளர் கன்னியாகுமரி ஜெயாஸ்ரீதரன்,சட்ட ஆலோசகர் கன்னியாகுமரி வழக்கறிஞர் எமிலின் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் ஒருங்கிணைப்பாளர் துறையூர் பால்ராஜ்,மாநில துணை செயலாளர் தென்காசி நாராயணன், சங்க பிரதிநிதிகள் தேனி சங்கர், சங்கரன் கோவில் ராஜாராம், மாவட்ட பிரதிநிதிகள் துறையூர் தஞ்சாவூர் வரதராஜன், புதுக்கோட்டை நீலமோகன், மதுரை முத்துராஜ், விருதுநகர் மகேந்திரன், திண்டுக்கல் மணிகண்டன், ராமநாதபுரம் சங்கர்,ஈரோடு கலாமணி, தூத்துக்குடி பாலசுப்ரமணி, கன்னியாகுமரி பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறி சிறப்பித்தனர்.இதனை தொடர்ந்து ஒருமனதாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் -1,புதிதாக தமிழ் நாடு முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு புதிய கரங்கள் அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம்-2,தமிழக அமைச்சரவையில் சமத்துவத்தோடு அமைச்சர் நியமனம் செய்ததற்கும், வாய்பேச்சு இல்லாமல் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியமைக்கும் தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான தமிழக அரசுக்கு இச்சங்கம் பாராட்டு மற்றும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம் -3, தேவையற்ற இடங்களில் தொழிலாளர்கள் ஓய்வறை என்ற பெயரில் கட்டுமானம் கட்டி நிநி இழப்பை ஏற்படுத்தியதை இச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.தீர்மானம்-4,
இதுபோன்ற நிதியினை உண்மையான தொழிளார்கள் பயன் பெறும் வகையில், கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்கவும், இறப்பு உதவித்தொகை ஐம்பதாயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கவும், ஓய்வூதியம் ரூபாய் 1,200ல் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், தீர்மானம் -5,புதிதாக பொறுப்பேற்றவர்களும், இனி பொறுப்பேற்க உள்ளவர்களும் தாலுக்கா அல்லது தொகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமனம் செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த சங்க மாநிலத் துணைத் தலைவர் ராஜலட்சுமி நன்றி உரையாற்றினார்.தேசிய கீதம் பாடலுடன் விழா நிறைவு பெற்றது.