வில்லியனூரில் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் – அமைச்சர்கள், துணைநிலை ஆளுநர் பங்கேற்பு
புதுச்சேரி, வில்லியனூர்:
வில்லியனூரில் அமைந்துள்ள அருள்மிகு பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற தேரோட்ட விழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.
தேரோட்டத்தை புதுச்சேரி அமைச்சர்கள், துணைநிலை ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.), கோயில் அறங்காவலர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து, “கோவிந்தா… கோவிந்தா…” என்ற பக்தி முழக்கத்துடன் தேரை நான்கு மாடவீதிகளிலும் இழுத்துச் சென்று வழிபட்டனர். விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து சுவாமியின் அருளைப் பெற்றனர்.
மேலும், தேரோட்டம் நடைபெற்ற வழித்தடங்களில் பல்வேறு இடங்களில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.