தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 403 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜகுமார் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர், ஒவ்வொரு மனுவின் மீதும் அரசின் விதிமுறைகளின்படி குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன், பொது தனித்துணை ஆட்சியர் கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கமலராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.