தருமபுரி, ஜூன் 29:

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கட்சித் தலைவர் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக, பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ரமேஷ் தலைமையில், அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருதுகள் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து, பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு 52 கிலோ எடையுடைய கேக் வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் ஒன்றிய செயலாளர் ரஞ்சித், பாலக்கோடு ஒன்றிய செயலாளர் குமார், கொள்கை பரப்பு மாவட்ட அமைப்பாளர் சந்தோஷ், பாப்பாரப்பட்டி தவெக நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *