துறையூர் தொகுதிக்கு அனைத்து நலத்திட்டங்களயும் வழங்கியது திமுக அரசு தி.மு.க.பொது கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
துறையூர் ஜூன் -30
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் பாலக்கரை கலைஞர் திடலில் ஜீன் -30ந் தேதி மாலை 6 மணியளவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துறையூர் நகர செயலாளர் மெடிக்கல் முரளி வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சரும், முதன்மை செயலாளருமான கே என் நேரு தலைமை வகித்து பேசும்பொழுது, துறையூர் தொகுதிக்கு அனைத்து நலத்திட்டங்களும் வழங்கியது திமுக அரசு தான், துறையூர் நகருக்கு மட்டும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அரசு கலைக்கல்லூரி, துறையூர் ஆத்தூர் நெடுஞ்சாலை, துறையூர் பெரம்பலூர் நெடுஞ்சாலை, புளியஞ்சோலை கூட்டு குடிநீர் திட்டம், பச்சமலையில் எடை மெஷின் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு செய்து உள்ளது என பேசினார்.சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கோவி செழியன் பேசியபோது,
தமிழாக வாழ்ந்த ஒரு அரசியல் தலைவர் உண்டு என்றால் அண்ணாவுக்கு பிறகு அன்பு தலைவர் டாக்டர் கலைஞர் மட்டும் தான். நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லப்படியாக இருக்கட்டும். தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வரும் சூழல் உள்ளது.
அப்படி வந்தால் கழக உடன்பிறப்பே பணியாற்ற தயாராக இரு என்று தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார், ஆகவே கழகத்தினர் அனைவரும் உற்சாகமாக செயல்படுவோம் என்று பேசினார். இதில் மாவட்ட பொருளாளர், முன்னாள் மாவட்ட சேர்மன் தலைவர் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கனகராஜ், திருச்சி மேயர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ ஸ்டாலின்குமார், பொது குழு உறுப்பினர் கிட்டப்பா, ஒன்றிய செயலாளர்கள் இள.அண்ணாதுரை, வீரபத்திரன்,சிவசரவணன் முத்துசெல்வன், அசோகன், பேரூர் கழக செயலாளர்கள் நடராஜன்,வெள்ளையன், துறையூர் நகர மன்ற தலைவர் செல்வராணி,முன்னாள் துறையூர் ஊராட்சி ஒன்றிய ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன்தாஸ்,கலை இலக்கிய பகுத்தறிவு அணி மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ்குமார்,சுற்று சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு,நகர துணை செயலாளர் பிரபு, பேச்சாளர் துரை பாண்டியன்,வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் திருமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், நகர்மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன், நித்யா கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள் ரெங்கநாதபுரம் கார்த்திக், நடுவலூர் மளிகை ஜெயராமன்,இளைஞர் அணி ஸ்டுடியோ சசிகுமார்,
மத்திய ஒன்றிய துணை அமைப்பாளர் அன்பு காந்தி,18வது வார்டு மோகன்,சசிகுமார்,
தொமுச சுப்பையா,ராஜீ மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் துறையூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் இள.அண்ணாதுரை நன்றி கூறினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்