தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் மேட்டுக்கடை அருகே அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு
குண்டடம், ஜூலை 1:
திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுக்கடை அருகே இன்று நடைபெற்ற சாலை விபத்தில், அரசு பேருந்து மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
கோயம்புத்தூரில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசு பேருந்து (பதிவு எண்: TN38 N 4027), ஓட்டுநர் ஆனந்த் (45) இயக்கத்தில், நடத்துநர் சண்முகம் (44) மற்றும் 52 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அப்போது, தொட்டியம் துறையைச் சேர்ந்த பால்ராஜ் (65), தனது TVS ஸ்கூட்டி (பதிவு எண்: TN78 D 5720) இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சாலையில் கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பால்ராஜை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.