மன்னார்குடி., ஜூன் 30

திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு சேமிப்பு கிடங்குகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழக மாவட்ட நிர்வாகம் உடனடியாக ரயில்கள் மூலமாக அரவைக்கு உடனடியாக எடுத்துச் செல்ல வலியுறுத்தியும். டீசல் விலையேற்றம், லாரி உதிரிபாகங்களின் விலையேற்றம் இவற்றை கருத்தில்கொண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நிர்வாகம் லாரி வாடகையை 40% உயர்த்தி வழங்கவேண்டும் .

பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் மன்னார்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நிரந்தரமாக மோட்டார் வாகன ஆய்வாளரை நியமிக்கவேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி . மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

முன்னதாக நகராட்சி அலுவலகத்திலிருந்து லாரி உரிமையாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *