ஈரோடு ஜூலை – 1
ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முனியப்பன் கோவில்-ல் சாமி கும்பிட்டு பொது மக்களுக்கு நன்றி தெரிவிப்பு ஆரம்பம் செய்தார் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் மோகன். அவரை வரவேற்று பெரிய சேமூர் பகுதி கழகச் செயலாளர் மணிகண்டன் மற்றும் பெரியசேமூர் பகுதிகளை கழகத் துணைச் செயலாளர் ஹரி குமரன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்…
மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி…
ஈரோடு,சூளை, முனியப்பன் கோவில் வீதி, காவேரி நகர், இபிபி நகர் பெரியசேமுர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே கே ஆனந்த் மோகன் பொதுமக்களுக்கு மேல தாளங்கள் முழங்க நன்றியை தெரிவித்தார் உடன் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் விஜய் வெங்கட் பெரியசேமூர் பகுதி கழகச் செயலாளர் மணிகண்டன் பெரிய சேமூர் பகுதி கழக துணைச் செயலாளர் ஹரிக்குமரன் உட்பட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் காவிரி நகர் உட்பட பல பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் தங்களது மனுவை கொடுத்தனர் அதனைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மனுவை பரிசீலித்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு தெரியப்படுத்தி உங்களது குறைகளை நிவர்த்தி செய்து தருகிறோம்.என பொதுமக்களிடம் கூறினார் காவிரி நகர் பகுதியில் எம்எல்ஏ வை வரவேற்று பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்..