வடலூரில் தனியார் பேருந்து, தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு பேருந்து தீப்பிடித்ததால், அருகில் இருந்த ஏழு கடைகள், எட்டு இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகியதால் பரபரப்பு

கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி, ஜெயவிலாஸ் என்ற தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது வடலூர் நான்கு முனை சந்திப்பில் உள்ள, விருத்தாசலம் பஸ் நிறுத்த்தில், நின்று கொண்டிருந்தபோது, வாகனத்தில் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாக, பேருந்து நகராமல் நின்றுள்ளது. இதனை அறிந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தில், இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டு, மெக்கானிக்கை கொண்டு பேருந்தை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பார விதமாக, தீ விபத்து ஏற்பட்டு, தீ பரவி பஸ் முழுவதும் எரிய தொடங்கியது.

இந்த தீ விபத்து காரணமாக பஸ் நிறுத்தம் அருகே இருந்த முட்டாய் கடை மற்றும் பட்டாணி கடைகள், மளிகை கடைகள் ஆகிய 7 கடைகள் மற்றும் 8 இருசக்கர வாகனங்களில் எரிந்து நாசமாகின.

தீ விபத்து தொடங்கியதும், கடலூர் நான்கு ரோடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி, நெய்வேலி பகுதி தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து, சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலமாக போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவத்தால் வடலூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

இது குறித்து வடலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *