கரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் தூய்மை பணி
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய கரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதியதாக பொறுப்பேற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக (PTA) தலைவர் பிரகாஷ் தலைமையில் இன்று பள்ளி வளாக தூய்மை பணி நடைபெற்றது.
சுமார் 2010-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் இதுவரை 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று, இப்பள்ளி சிறப்பிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து ஆர்வமுடன் ஈடுபட்டனர். நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ், துணைத் தலைவர் பிரபாகரன், கௌரவ தலைவர் சாமிநாதன், இணைச் செயலாளர் ஜெகன், பொருளாளர் ஆனந்தன், முன்னாள் காவலர் மன்னன், ஊர் கவுண்டர் ஜீவா, கல்வியாளர் தனபால், சங்கர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் திலகேஷ், அருண் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செயற்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், வெங்கடாஜலபதி, அருண்குமார், அலெக்ஸ், சமரசம், சென்னையன், ஜெயக்குமார், பிரபாகரன், லவ்கேஷன் உள்ளிட்டோரும் பணியில் பங்கேற்றனர்.பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகளை கிராம மக்கள் பாராட்டியதாகவும், பள்ளியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து இதுபோன்ற பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.