நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் சார்பில் திருவாரூரில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதான கோரிக்கையாக நீட் தேர்வில் முறைகேடுகளை கண்டித்தும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு காரணமாக இருந்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.