கடலூர் மாவட்டம் காரைக்காடு ஊராட்சி கே.புதூரில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் (NADCP) 9-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். மேலும், கால்நடை வளர்ப்போருக்கு பசுந்தீவனம் மற்றும் தாது உப்புகளையும் வழங்கினார்.
வருகிற ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில், மாவட்டம் முழுவதும் 95 சிறப்புக் குழுக்கள் மூலம் சுமார் 2.9 லட்சம் பசு மற்றும் எருமைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோமாரி நோயால் கால்நடைகளின் பால் உற்பத்தி, வேலைத்திறன் மற்றும் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதால், அனைத்து கால்நடை வளர்ப்போரும் தடுப்பூசி செலுத்தி, கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தல்களை பின்பற்றி கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.