மேட்டுப்பாளையம், ஜூலை. 2: மேட்டுப்பாளையம் அருகே காரமடை எஸ்.வி.ஜி.பி 3ஆம் வகுப்பு மாணவி வயிற்றில் 52 கிலோ கல்லை நான்கு முறை வைத்து சமுட்டியால் உடைத்து வேர்ல்ட் ஒய்டு புக் ஆப் ரெகார்டில் இடம் பிடித்து சாதனை பிடித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் அருகே பெரிய படியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்ஜீவ் மற்றும் கீர்த்தனா தம்பதியர்.‌இவர்களது மகள் லோக்ஷிதா (7). இவர் காரமடை எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜென்வாரியஸ் மார்ஷல் ஆஃப் அகாடமி கராத்தே பள்ளியில் பயற்சி பெற்று வருகின்றனர்.

இவர் கராத்தே போட்டியில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றம் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். இதன் ஒரு கட்டமாக இவர் வேர்ல்ட் ஒய்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக இவரது வயிற்றில் தலா 52 கிலோ கற்களை வைத்து சமுட்டியால் அடித்து உடைத்துள்ளனர். இதே போல் 4 முறை உடைத்துள்ளனர்.


சாதனை படைத்த இந்த மாணவியை பள்ளி தாளாளர் டாக்டர் பழனிசாமி, முதல்வர் சசிகலா, நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ரத்தினசாமி, அறங்காவலர்கள் தாரகேஸ்வரி, ராஜேந்திரன், வேலுச்சாமி மற்றும் நிர்வாக அலுவலர் சிவ சதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் சக மாணவர்கள் பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *