திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சித.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் நா.மனோகரன் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி டிஎஸ்பி கே.சி.சதிஷ்குமார் பங்கேற்று, மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடனும் மற்றும் ஒழுக்கத்துடனும் செயல்பட்டால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று வலியுறுத்தினார். மேலும் அனைத்து துறை தலைவர்களும், உடற்கல்வி இயக்குநர் முனைவர் ப.மோகனவள்ளி. தமிழ் துறை பேராசிரியர் தா.சுகந்தி மற்றும் கௌரவ விரிவுரையாளர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியில் கணிதத் துறைத் தலைவர் முனைவர் வ.சந்திரசேகர் நன்றியுரை கூறினார் நிகழ்வினை வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ர.மணிமுருகன் தொகுத்து வழங்கினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.