நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா மோகனூரில் உள்ள அருள்மிகு மங்களநாயகி உடனுறை அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் மற்றும் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு விமான கும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 29ஆம் தேதி தொடங்கிய யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று இன்று காலை நான்காம் காலையாக பூஜைகள் நிறைபெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க பின் கலச நீர் ஆலயத்தை வலம் வந்து சரியாக காலை 11.15 க்கு விமான கும்பாபிஷேகம் அதனைத் தொடர்ந்து முத்து மாரியம்மன் ஆலய விமான கும்பாபிஷேகமும் பின் சிவன் கோயில் மூலவர் மற்றும் அம்பாள் கும்பாபிஷேகம் அதனைத் தொடர்ந்து முத்து மாரியம்மன் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து ஏளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.