மதுரை: அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர்கள் குழுவின் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவராகவும், கூடுதல் பொறுப்பாக மாநில சட்டப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும், மதுரையைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் ஏ. ஜமாலுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமன ஆணை, இயக்கத்தின் தேசிய நிறுவனத் தலைவர் சுதேப் சக்ரவர்த்தி, தேசிய செயல் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர்கள் நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவருமான தாக்கூர் அனில் சிங் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் ஜெஹுரூதீன் ஆகியோரின் ஒப்புதலுடன் வழங்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. ஜமாலுதீன், நீண்டகாலமாக பொதுப்பணிகள் மற்றும் சட்டத் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவரது சேவையைப் பாராட்டும் வகையில் இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது நியமனம் குறித்து ஏ. ஜமாலுதீன் கூறுகையில், “அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர்கள் குழுவின் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் பிரிவு தலைவராகவும், மாநில சட்டப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும் என்னை நியமித்த தேசிய தலைமையினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சட்டப் பிரிவை மேலும் வலுப்படுத்தவும், இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்,” என்றார்.
ஜமாலுதீனின் புதிய நியமனத்திற்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.