புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான த.வெ.க. அரசின் முடிவிற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டு பலர் தெரிவித்து வருகின்றனர்..
அதே வேளையில், இந்த நியமன நடைமுறைகளில் முறைகேடுகள் மற்றும் லஞ்சம் நடைபெறுவதாகக் கூறி த.வெ.க. கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உட்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சாக்ரடீஸ், அரசு வழக்கறிஞர்களாக புதியவர்கள், குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது வரவேற்கத்தக்க மாற்றம் என்று தெரிவித்தார்.
காலம் காலமாக பணமும், செல்வாக்கும் உள்ளவர்களுக்கே அரசு வழக்கறிஞர் பதவி கிடைக்கும் என்ற நிலையை மாற்றி, சாதாரண பின்னணியில் உள்ள திறமையான வழக்கறிஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் நடவடிக்கையை வரவேற்பதாகவும், இதற்காக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தில் ஆளும் கட்சிகளாக இருந்த இரு கட்சிகளும் இதே நடகமுறையை பின்பற்றி வந்த நிலையில் தற்போது த.வெ.க.அரசு எந்த வேறுபாடும் இல்லாமல் பலதரப்பட்ட வழக்கறிஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கி உள்ளது உள்ளபடியே பாராட்டுகுரியது என அவர் தெரிவித்தார்..