மதுரை.ஜூலை.07-

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் அனைத்து பகுதி லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மனுநீதி நாளில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த்கிருஷ்ணாவை சந்தித்து கோரிக்கை மனு வழங்க வந்திருந்தனர்.

அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி லாரி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மட்டும் செல்லும்படி கூறினர் அதனை ஏற்று ஐந்து பேர் மட்டும் உள்ளே சென்றனர் மீது அனைவரும் வெளியிலே காத்திருந்தனர் கோரிக்கை மனு வழங்க சென்றவர்கள் ஆட்சியர் அவர்களிடம் நேரில் மனுவை வழங்கினர்.

மனுவை வாங்கி பார்த்த அவர் தங்களுக்கு என்ன தேவை என கேட்டறிந்தார் அதற்கு பதில் அளித்த லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறியது குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்படாமல் மூடப்பட்டுள்ளன இதனால் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் கிளீனர்கள் மற்றும் இந்த தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடுமையான வாழ்வாதார நெருக்கடி சிக்கி உள்ளனர்.

குவாரிகள் மற்றும் கிரஷர்கள் திறந்து செயல்படுத்தவும்
டிரான்சிட்பாஸ் முறைகேடுகளை தடுக்கவும் கட்டுமான பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்தவும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் படியும் எங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு தங்கள் உதவி செய்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் மனுவை வாங்கி பார்த்த ஆட்சியர் அவர்கள் உடனே அதிகாரிகளை வரவழைத்து பரிசீலனை செய்தார் தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து வெளியே வந்த சங்க நிர்வாகிகள் அங்கு காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்களிடம் ஆட்சியர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் கூறியதை அவர்களிடம் தெரிவித்தனர். அரசு மூலமாக விரைவில் நமக்கு நல்ல செய்தி வரும் என அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *