கல்பாக்கம், ஜூலை 6
கூவத்தூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் எம்.எல்.ஏ. இராஜசேகர்
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கூவத்தூர் ஊராட்சியில் உள்ள கூவத்தூர் கிராமம், கீழார் கொல்லை, பெரும்பள்ளம், கானத்தூர் குப்பம், இருளர் பகுதி, பழைய காலனி உள்ளிட்ட பகுதிகளில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் இராஜசேகர் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் கே. வேலு தலைமையில் ஒன்றிய பொருளாளர் நைனா கண்ணு, நிர்வாகிகள் பழனி, சரவணன், ஞானம், முருகேசன், தேவதாஸ், சண்முகம், தனசேகர், பலராமன், செல்லப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.