வயநாடு மேப்பாடி சுரங்கப்பாதை அருகே ஏற்பட்ட நிலச்சரிவின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மீனாட்சி பாலம் அருகே பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.வயநாடு சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எத்தனை பேர் மண்ணுக்குள் சிக்கியுள்ளனர்

என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொழிலாளர்களை அழைத்து வந்த பேருந்தின் மீதும், அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த குடிலின் மீதும் மண் சரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.வாகனங்களும் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுரங்கப்பாதை கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் தடுப்புச் சுவரும் இடிந்து விழுந்துள்ளது. நேற்று மாவட்டத்தில் மிகக் கனமழை பெய்தது. தொழிலாளர்கள் மற்றும் சாலையில் பயணம் செய்தவர்கள் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *