ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தனஞ்செழியன் தலைமை தாங்கி பேசியதாவது

ஒரு மனிதனை சமூக அவலமாக மாற்றுவது போதை பொருட்கள் தான் அவனுடைய ஒழுக்கம் தன்மானம் போன்றவற்றை போதையினால் இழக்க நேரிடுகிறது
போதைப் பொருளால் அவன் மட்டும் அழியாமல் அவனுடைய குடும்பமும் அழிந்து விடுகிறது
எனவே எந்த வகையிலும் இல்லத்திலும் உள்ளத்திலும் போதையினை அனுமதிக்க வேண்டாம் என குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு பதாகைகள் ஏந்தி கிராம சாலை வழியாக ஊர்வலம் மேற்கொண்டு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.இந்த நிகழ்வில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்உதவி தலைமை ஆசிரியர் கோபிநாதன் வேத லட்சுமி பாக்யராஜ் பேபி கிருஷ்ணகுமாரி அமலா பாக்கியலட்சுமி ஆய்வக உதவியாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *