மாநகராட்சி குப்பைக் கிடங்கில் எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் நான்கு நாட்களாக தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன் கண்காணிப்பில் 80க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட போதிய வசதிகள் செய்து தரப்பட வில்லை என வேதனையடைந்துள்ளனர். அவர்களுக்கு போதிய வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளில் இருந்து வெளியேறும் புகை அவனியாபுரம், சிந்தாமணி, சாமநத்தம், பெருங்குடி, வெள்ளக்கல் வட்டார பகுதிகளில் பரவி புகை மண்டலமாக மாறி பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கியது.
நான்காவது நாளாக மாநகராட்சி தண்ணீர் லாரிகளுடன் இணைந்து தீயை அணைக்க பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களாக காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைப்பது பெரும் சவாலாக உள்ளது.
தீ பரவலை கட்டுப்படுத்த புதிய உத்தியாக குப்பைகளுக்கிடையே பள்ளங்களை உருவாக்கி அதில் தண்ணீர் நிரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.