திண்டுக்கல் மாவட்டம்,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அணைப்பட்டி மற்றும் பாலாறு பொருந்லாறு அரசு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணைகளில் இந்திய பெருங்கெண்டை மீன் இனங்களான கட்லா,ரோகு மற்றும் மிர்கால் இன மீன்குஞ்சுகள் சுமார் 11.14 இலட்சம் வளர்த் தெடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்திட தயார் நிலையில் உள்ளது.எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் மீன்வளர்ப்பு செய்து வரும் நீர்த்தேக்கம் மற்றும் குளங்களின் குத்தகைதாரர்கள், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மீன்வள விவசாயிகள் மற்றும் தனியார் மீன்பண்ணை மீன்வள விவசாயிகள் தங்களது மீன் பண்ணைகளுக்கு தேவையான இந்திய பெருங்கெண்டை மீன் குஞ்சுகளை தேவைக்கேற்ப அரசு நிர்ணயித்த குறைந்த விலையில் கொள்முதல் செய்து பயனடைந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும், கூடுதல் விவரங்களுக்கு அணைப்பட்டி, மீன்வள சார் ஆய்வாளர்.பாப்பாத்தி கைபேசி எண்-6374826415 மற்றும் பழனி, மீன்வள ஆய்வாளர்.சாந்தி கைபேசி எண்-7598236815 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர். துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.