மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்
தென்காசி ஜூலை – 10
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் இயற்கை எழில் சிறந்த பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள குன்றின் மீது குமரன் அமர்ந்திருக்கும் இயற்கையான குகைக்கோயில் ஆகும் இது இக்கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பழமையும் பெருமையும் உடையதாகும்.
இயற்கையை பேணும் வண்ணம் இக்கோவிலில் 27 நட்சத்திரங்களுக்கான மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் மேலும் கிரிவல பாதை முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வைப்பதென முடிவு செய்யப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தோரணமலை கோயில் நிர்வாகம் மற்றும் மழை நண்பர் குழு நிறுவனர் சுந்தரமகேஷ், தலைவர். கிருஷ்ணவேணி அவர்கள், பொருளாளர் அன்சாரி, Ex. தலைவர். ராஜா மற்றும் குற்றாலம் சாதனா ரோட்டரி கிளப் ஜெயலட்சுமி, பூரசெல்வி, பொன்னி, ஆனந்தம்மாள், ஆனந்த் அனிதா ஆகியோருடன் கலந்து கொண்டு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் ஆசிரியர்கள் கண்ணன், வினோத், சகுந்தலா, மாணவர்கள் கலந்து கொண்டுதோரணமலை சுற்றிலும் 2000 விதைப்பந்துகளை வீசும் விழா என்று நடைபெற்றது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்து இருந்தார்
2000 விதைப்பந்துகள் கிரிவலப்பாதை முழுவதும் வீசப்பட்டுள்ளது