கல்லட்டி மாலை பாதையில் சுற்றுலா வாகனங்களை அனுமதிக்க வேண்டும் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் கிருஷ்ணசாமி பேட்டி
தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகை செல்லும் சாலையை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு. மேல் முறையீடு செய்ய தவறிய த.வெ.க அரசை கண்டித்து இன்று மசினகுடி முழுவதும் கடை அடைப்பு. சுற்றுலா வாகனங்கள் இயங்காததால் சுற்றுலா பயணிகள் தவிப்பு
தமிழ்நாடு , கேரளா , கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்க கூடிய பகுதியாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்தியாவில் தலைசிறந்த புலிகள் காப்பகம் மற்றும் இதமான கால நிலை நிலவுவதால் இங்குள்ள வனவிலங்குகள், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும், இதமான காலநிலையை அனுபவிக்கவும் ஆண்டுக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளை நம்பி மசினகுடி , வாழைத்தோட்டம், மாவனள்ளா உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 1500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் மூலம் வாகன சவாரி அழைத்துச் சென்று மசினகுடி – மாயார் மற்றும் சிங்கார சாலைகளில் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டு வன விலங்குகளை காண்பிப்பது வழக்கம். இதேபோல் மசினகுடியில் இருந்து கல்லட்டி மழை பாதை வழியாக உதகைக்கு செல்லும் வாகனங்கள் மூலம் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்லும் நிலையில் அண்மையில் மசனகுடியில் இருந்து கல்லட்டி வழியாக செல்லும் மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதித்தும்,
மசினகுடியிலிருந்து மாயார் , சிங்கார செல்லும் சாலையை வனத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இப்பகுதியில் வாழும் 1500 குடும்பங்கள் நிலை கேள்விக்குறியாகி உள்ளது .மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையில் உடனடியாக த.வெ.க அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து ஏழை எளிய கிராம மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் த.வெ.க அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று முதுமலை புலிகள் காப்பகம் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று ஒரு நாள் ஜிப் ஓட்டுநர்கள் கருப்புக்கொடி ஏந்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.