தென்காசி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடையம் வட்டாரத்தின் சார்பாக வட்டார வள மையத்தில் விதைப்பந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு கடையம் சத்திரம் பாரதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அலுவலர் ராஜன் அவர்கள் தலைமை வகித்தார்


விழாவிற்கு வருகை தந்தவர்களை கடையம் வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் வரவேற்று விதைப்பந்தின் பயன்களையும் அதன் அவசியத்தையும் பற்றி விரிவாக அவர் எடுத்துரைத்தார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக டாக்டர் விஜயலட்சுமி கலந்து கொண்டு பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு, மரம் நடுதலின் அவசியம் இயற்கை விவசாயம் மற்றும் பறவையூட்டம்( பறவைகளுக்கான உணவு அளித்தல்) போன்ற தலைப்புகளில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.


கடையம் வட்டாரத்துக்கு உட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தன.ஆழ்வார்குறிச்சி மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின் மூலம் விதைப்பந்துகள் பெறப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இறுதியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *