தேனி:
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ராமன் அவர்களை மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் பூங்கொத்து வழங்கி மரியாதையுடன் வரவேற்றார்.
அமைச்சரின் மாவட்ட வருகையையொட்டி நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.