கும்பகோணம்; குடந்தை மருதம் லயன்ஸ் சங்க புதிய பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா ஏ ஆர் ஆர் லைலா சுப்பிரமணியம் மஹாலில் நடந்தது.
2026-27-ம் ஆண்டிற்கான குடந்தை மருதம் லயன்ஸ் சங்கத்தின் புதிய தலைவராக லயன்வேணு.ஜெயராமன், செயலாளர்கள் லயன் என், சங்கர்,கே. பாலகிருஷ்ணன், பொருளாளராக கே.சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பொறுப்பேற்றுக் கொண்டனர், இவர்களுக்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் லயன் எஸ். வீரபாண்டியன் பதவிப்பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.
புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து, மண்டல தலைவர் லயன் மோகன் வாழ்த்துரை வழங்கினார்.புதிதாக பொறுப்பேற்றுள்ள சங்கத் தலைவர் லயன் வேணு. ஜெயராமன் ஏற்புரை ஆற்றினார்
சசிதரன்,எழிலரசி ரவி, நடராஜன் சரவணபெருமாள் ,மாறன் மனோகரன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்.பயனாளிகளுக்கு அரிசி புடவை மளிகை சாமான்கள் ,மற்றும் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் பேக் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக முன்னாள் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்றார்.நிறைவில் செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.இதில் சங்க இயக்குநர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொது மக்கள், பங்கேற்றனர்.