பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்….
கர்மவீரர் “பெருந்தலைவர்” காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு
கிங் மேக்கர் வெல்பேர் பவுண்டேசன் மற்றும் அட்சயம் லயன் சங்கம் பாபநாசம், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய 12- ஆம் ஆண்டு இரத்ததான முகாம்.
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பொறுப்புத் தலைமை ஆசிரியர் லட்சுமி பிரபா முகாமினை தொடங்கி வைத்தனர் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. K முருகவேலு B.sc அவர்கள் மற்றும் ,கும்பகோணம் இந்தியன் ரெட் கிராஸ் தலைவர் V.ரோசாரியோ MSW அவர்கள் முன்னிலை வகித்தனர்.
இரத்ததானமுகம் ஒருங்கிணைப்பாளர் , நிறுவனத் தலைவர் பார்த்திபன் ரவிச்சந்திரன், துணை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் மற்றும் சங்க உறுப்பினர்களும், நண்பர்களும், பொதுமக்களும் 35க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார் .அட்சயம் லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் வக்கீல் சரவணன் அவர்கள் மற்றும் தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் சங்க உறுப்பினர்கள் இரத்ததானம் வழங்கினர்
கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை இரத்த வங்கி டாக்டர். சுகந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் இரத்தத்தை சேகரித்தனர் இரத்ததானம் வழங்கிய நபர்களுக்கு நற்சான்று. வழங்கப்பட்டது