சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ மரகத வள்ளி அம்பாள் சமேத மார்க்க சகாயர் வழிதுணை நாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேக தரிசனம் கண்டு மூலவரை வணங்கி சென்றனர்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் கிராமத்தில் மிகப் பழமையான ஸ்ரீ மரகத வள்ளி அம்பாள் சமேத மார்க்க சகாயர் வழித் துணைநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடத்திட கிராம முக்கியஸ்தர்களால் அதன் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் ஒரு மதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த இதன் விழா ஏற்பாடுகள் நடைபெற்று முடிந்தபின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்றன.

யாகசாலை பூஜைகள் முடிவுற்றபின் கடம் புறப்பாடு மூலம் மங்கள வாத்தியங்கள் முழங்க
புனித நீர் கலசம் கோவில் கோபுரத்தின் மீது கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பக்தர்களின் பக்தி கோஷம் ஓங்கி ஒலிக்க ஸ்ரீ மரகத வள்ளி அம்பாள் சமேத மார்க்க சகாயர் வழித் துணைநாதர் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் மகா தீபாராதணை கட்டப்பட்டு பக்தர்களுக்கு கோவில் பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேக தரிசனம் செய்து மூலவரை வணங்கியும் சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *