காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முத்தமிழ் மன்றத்தில் 15/07/2026 புதன்கிழமை அன்று காமராசர் பிறந்தநாளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அனிதா அவர்கள் வரவேற்புரையாற்றினார். காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் செல்வக்குமார் அவர்கள் காமராசரின் துணிவு, அவரின் திட்டங்கள் மற்றும் கல்வி சிந்தனைகளைக் கூறி தலைமையுரையாற்றினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் நாகராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரையை வழங்கினார் . தமிழ்த்துறை தலைவர் முனைவர் கவிதா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பட்டிமன்ற பேச்சாளர், அகில இந்திய வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர் தருமபுரி ஜே.எஸ். திரு. அதியமான் அவர்கள் கல்வியும் புரட்சியும் என்ற தலைப்பில் பெண்கல்வியின் அவசியம் மற்றும் கதைகளின் மூலம் காமராசரின் புரட்சி பற்றி எடுத்துக்கூறியதோடு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் உச்சத்தை அடைய முடியும் என மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கையை விதைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் தி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவத் தலைவர் முனைவர் நடேசன், தலைவர் அன்பழகன், செயலாளர் பேராசிரியர் இளங்கோவன், தாளாளர் இராமநாதன், துணைத்தலைவர் மதன் கார்த்திக், இணைச்செயலாளர் ஹரிசங்கர், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், மாணவர் சேர்க்கையின் புல முதன்மையர் பேராசிரியர் நந்தகுமார்,அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியருமான கவிதா அவர்கள் நன்றியுரையாற்றினார்.