​கோயம்புத்தூர்:
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த பிரபல குறுங்கலை கலைஞர் யு.எம்.டி. ராஜா, தமிழ் எழுத்துக்களைத் தலைகீழாக எழுதி காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுச் சாதனைகளை ஓவியமாக வரைந்து ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.


​நீண்ட நாள் தீவிரப் பயிற்சிக்குப் பிறகு தமிழ் எழுத்துக்களைத் தலைகீழாக எழுதும் தனித்துவமான கலையைக் கற்றுக்கொண்ட இவர், இந்த ஓவியத்தை மிகவும் வித்தியாசமான முறையில் வடிவமைத்துள்ளார். சாதாரணமாகப் பார்க்கும்போது வெறும் காகிதமாகத் தெரியும் இதில், தண்ணீரை ஸ்பிரே செய்து (தெளித்து) பின்புறமாகத் திருப்பிப் பார்க்கும் பொழுது, பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுச் சாதனைகள் அச்சு அசல் பழங்கால அச்சு எழுத்துக்களைப் போல மிகத் தெளிவாகவும் அழகாகவும் கண்முன்னே புலப்படுகின்றன.


​நேராக எழுதுவதை விட, தமிழ் எழுத்துக்களைத் தலைகீழாக எழுதி திருப்பிப் பார்க்கும்போது அது தரும் காட்சி அலாதியானது என்றும், ஏழைகளின் கல்விக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வரலாற்றை இத்தகைய கடினமான தமிழ் எழுத்தோவியக் கலையின் மூலம் வரைந்து பெருமைப்படுத்தியதில் தான் மிகுந்த பெருமிதம் கொள்வதாகவும் கலைஞர் யு.எம்.டி. ராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த அசாத்திய திறமையும், பெருந்தலைவருக்குச் செலுத்திய விசித்திரமான பிறந்தநாள் மரியாதையும் தற்போது அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *