தூத்துக்குடி ஜூலை 16,
முன்னாள் முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழாவை நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க தூத்துக்குடியில் கழக அமைப்பு செயலாளரும் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி வஉசி மார்கெட் அருகில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவசிலைக்கும், தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி அருகில் அலங்கரிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு சேலை, வேஷ்டி மற்றும் இனிப்புகள் வழங்கி கமராஜரின் 124வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்கள்.
இந்நிகழ்வில் மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, பகுதி கழக செயலாளர்கள் ஜெய்கனேஷ், முருகன், மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் எம்.பெருமாள், நடராஜன், தனராஜ், டேக் ராஜா, பில்லா விக்னேஷ், கே.ஜே.பிரபாகர், அய்யணடைப்பு ராஜேந்திரன், நிர்வாகிகள் முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, முடிமண் ராமசாமி, கல்விக்குமார், சத்யாலெட்சுமணன், நவ்சாத், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், முத்துக்கணி, எம்.டிராஜா, தூத்துக்குடி மணிகண்டன், வர்தக அணி சுகுமார், சொக்கலிங்கம், கே.கே.பி.விஜயன், ஏ.பி.ஆர்.கவிஅரசு, முள்ளக்காடு ஸ்ரீராம், கணேசன், அசோகன், மிக்கேல், சேவியர் ராஜ், கனகவேல், ராஜவேல், வட்ட கழக செயலாளர்கள் கொம்பையா, மணிவண்ணன், ஜெய்குமார், சங்கர், துரைசிங், ராஜ்குமார், மகளிர் அணி நிர்வாகிகள் மெஜிலா, சாந்தி, தமிழரசி, இந்திரா, அன்னபாக்கியம், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்