தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம், குண்டடம் உள்வட்டத்திற்குட்பட்ட நந்தவனம்பாளையம் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வரும் 42 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் புலத்தணிக்கை மேற்கொண்டார்.

இந்த குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் வகையில் ஏற்கனவே முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, நிலைமைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர், தாராபுரம் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தும்பலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை நேரில் ஆய்வு செய்து, உணவின் தரம், சுகாதாரம் மற்றும் வழங்கும் நடைமுறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மாணவர்களுடனும் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *