பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தலைமையில் தாந்தோணி வட்டாரம் கோவிந்தம் பாளையத்தில்
உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.உடன் மாவட்ட துணைத் தலைவர் சின்னையன்,ஆர்டிஐ மாநில பொதுச் செயலாளர் ஜிபிஎம் மனோகரன்,மாவட்ட செயலாளர் சேகர், சனப்பிரட்டி ஊராட்சி தலைவர் முத்துசாமி, பொருளாளர் செல்வராஜ், வழக்கறிஞர் பிரிவு தலைவர் ரவிச்சந்திரன்,ஆட்டோ பாலு,கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் கண்ணையன் மற்றும் பலர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கும்,பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினர்