திருவாரூர்., ஜூலை.24

தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் திருவாரூர் அருகே தப்பளாம்புலியூர் பகுதியை சேர்ந்த 15 வயது உறவுக்கார சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாக ஆனதை தொடர்ந்து வந்த புகாரின் பேரில் கடந்த 2022ம் ஆண்டில் தமிழ்செல்வன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு திருவாரூர் மகிளா விரைவு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று வழக்கு இறுதி விசாரணை நடைபெற்றது. இதில்
3 பிரிவுகளில் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 2 ஆயிரம் அபராதம், மற்றொரு பிரிவில் 2 வருடம் தண்டனை, ரூ. 500 அபராதம் என எதிரி தமிழ்செல்வனுக்கு 62 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 6 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பளித்தார்.

இந்தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *