போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மேம்பாட்டு திட்ட முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட முகாம் இங்குள்ள வர்த்தகர்கள் சங்க பொன் விழா திருமண மண்டபத்தில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை தாங்கினார் நகராட்சி ஆணையாளர் அப்துல் முஸ்தபா முன்னிலை வகித்தார் இந்த திட்டத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவரது தகுடும்பத்திற்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாம் நலத்திட்ட உதவிகளும் தாட்கோ வீட்டு வசதி துறை மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட அரசு சேவைகளுக்கு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன் முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் எம் சங்கர் மற்றும் நகர் மன்ற கவுன்சிலர்கள் தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போடிநாயக்கனூர் நகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார் சுகாதார ஆய்வாளர் கபீர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *