அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக த்தின் பருவகால பணியா ளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை 48 மணி நேரத்துக்குள் இயக்கம் செய்ய வேண்டும். தாமதமாக இயக்கம் செய்யப்படும் போது ஏற்படும் இயற்கை மற்றும் எடை இழப்பினை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நெல் கொள்முதல் நிலையங் களுக்கான சாக்கு, சணல் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை நிர்வாக செலவிலேயே கொண்டு வந்து தர வேண்டும்.பெண் பணியா ளர்களுக்கு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உட்பட 11அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


போராட்டத்துக்கு பருவகால பணியாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார்.சங்கத்தின் துணைத் தலைவர் கமல் ராஜ் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார் ,சங்கத் தின் செயலாளர் சரவணபிரபு ,துணை செயலாளர்கள் எம் பாஸ்கர், அ.பாலன் ,பி. வேல்முருகன்,பிரபாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள் சார்லிசாப்ளின், எஸ் சுஜா, கோகிலா ,மாலதி ,மருதகாசி வீரமுத்து ,முத்துக்குமார், பாஸ்கர், உள்ளிட்ட பட்டியல் எழுத்தர்கள், உதவியாளர்கள், காவலர்கள் பலர் பங்கேற்ற னர்.கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத் தின் முடிவில்சங்கத்தின் பொருளாளர் எஸ் பாண்டியன் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *