ஈரோடு ஜூலை

கர்நாடக பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நாராயணா ஹெல்த் சிட்டி மருத்துவமனை டாக்டர்கள் ஈரோட்டில் பத்திரிகையாளர் களுக்கு சிறப்பு பேட்டி சிக்கலான மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் முதல் ரோபோடிக் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை வரை இதுவரை பத்தாயிரம் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு ஒரு புதிய சகாப்தத்தை படைத்துள்ளது நாராயணா ஹெல்த் சிட்டி மருத்துவமனை.

ஈரோடு மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் உலகத்தரம் வாய்ந்த எலும்பியல் சிகிச்சையை தங்கள் சொந்த ஊரில் இருந்தபடியே பெறலாம் பெங்களூரில் அமைந்துள்ள எங்களது நாராயண ஹெல்த் சிட்டி கடந்த மூன்று ஆண்டுகளில் பத்தாயிரம் எலும்பியல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து மேம்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை எலும்பியல் புற்றுநோய் சிகிச்சை விபத்து காய சிகிச்சை முதுகுத்தண்டு சிகிச்சை மற்றும் சிக்கலான மறு சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளது

இந்த சாதனை தசை எலும்பு தொடர்பான பல்வேறு நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கு அதிநவீன தொழில்நுட்பம் பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த சிகிச்சை அணுகுமுறை மற்றும் நோயாளியை மையமாகக் கொண்டே சிகிச்சை முறைகள் மூலம் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மருத்துவமனையின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது

ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பம் நோயாளிகளுக்கு ஏற்ப தனி பயனாக்கப்பட்ட இம்ப்லாண்ட் -ங்கள் மற்றும் முழுமையான மறுவாழ்வு நடைமுறைகளில் ஆதரவுடன் நாராயணா ஹெல்த் சிட்டியின் எலும்பியல் துறை அதி சிக்கலான நோயாளிகளுக்கும் உயர்ந்த அறுவை சிகிச்சை துல்லியத்துடனும் சிகிச்சை அளித்து வருகிறது இதன் மூலம் சிறந்த செயல் திறன் கொண்ட சிகிச்சை முடிவுகள் மற்றும் விரைவான குணமடைதல் உறுதி செய்யப்படுவதோடு ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த எலும்பியல் சிகிச்சை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்க வேண்டும் என்ற தனது உறுதிபாட்டையும் மருத்துவமனை மீண்டும் உறுதிப்படுத்துகிறது

இந்த மருத்துவ நிபுணத்துவம் சமீபத்தில் மருத்துவமனில் வெற்றிகரமாக சீர் செய்யப்பட்ட பல்வேறு சிக்கலான மற்றும் உயர் சவால்கள் நிறைந்த அத்தகைய ஒரு சவாலான வழக்கில் முழங்கால் பகுதியில் தொடர்ந்து வழி மற்றும் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுமி நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார் ஆரம்பத்தில் எலும்பு தொற்று என கருதி வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட திசு பரிசோதனையில் தீவிரத் தன்மை கொண்ட எலும்பு புற்று நோயான இருப்பது உறுதி செய்யப்பட்டது கீமோதெரபி சிகிச் சையில் சிறப்பான முன்னேற்றம் கண்டதை தொடர்ந்து புற்றுநோய் கட்டியை முழுமையாக அகற்றுவதோடு எதிர்காலத்தில் காலில் இயல்பான செயல்பாட்டையும் பாதுகாக்கும் வகையில் அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


சிறுமியின் இளம் வயதையும் எதிர்காலத்தில் எலும்பு வளர்ச்சி கணிசமாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு வழக்கமாக பயன்படுத்தப்படும் மூட்டு மாற்று செயற்கை மூட்டு பொருத்துவது பொருத்தமானதாக இருக்கவில்லை அவ்வாறு செய்திருந்தால் காலப்போக்கில் இரு கால்களின் நீளத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு ஏற்படும் அபாயம் இருந்தது இந்த சவாலை சமாளிக்கும் வகையில் நாராயண ஹெல்த் சிட்டியின் எழும்பியல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் ஜெர்மனியில் சிறப்பாக தயாரிக்கப்பட்டு சிறுமியின் எதிர்கால உடல் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடையும் தன்மை கொண்ட அறுவை சிகிச்சை இன்றி நீளத்தை அதிகரிக்க கூடிய தனிப்பயனாக்கப்பட்ட மூட்டு மாற்று செயற்கை மூட்டை வெற்றிகரமாக பொருத்தினர்

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த சிறுமி முழுமையாக நலமுடன் வாழ்ந்து வருவதோடு அவரது கால் வெற்றிகரமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் செயல் திறனும் இயல்பான வளர்ச்சியும் சிறப்பாக தொடர்ந்து வருகிறது நாராயண ஹெல்த் சிட்டியின் மூத்த ஆலோசகர் எலும்பியல் துறை டாக்டர் சுமன் எம். பைரேகாவுடா கூறுகையில் குழந்தைகளுக்கு ஏற்படும் எலும்பு புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் புற்றுநோய் கட்டியை முழுமையாக அகற்றுவதுடன் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட உறுப்பின் செயல் திறனையும் இயல்பான வளர்ச்சியும் பாதுகாப்பது மிக முக்கியமான சவாலாகும் இந்த சிறுமியின் வழக்கில் தனி பயனாக்கப்பட்ட விரிவடையும் செயற்கை மூட்டு பொருத்தப்பட்டதன் மூலம் அவரது கால் ஐ பாதுகாப்பதோடு அது இயல்பாக வளரவும் வழி வகுத்தோம். சில தசாப்தங்களுக்கு முன்பு எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு கால் அல்லது கை அகற்றும் அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது. ஆனால் இன்று கிமு தெரபி அறுவை சிகிச்சை நுட்பங்கள் மற்றும் இம்பிளான்ட் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் சுமார் 60 முதல் 80 சதவீத நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த முடிகிறது

மேலும் 90 முதல் 95 சதவீதத்திற்கு அதிகமான நோயாளிகளுக்கு உறுப்பை பாதுகாக்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடிகிறது எலும்பு புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் சரியான நேரத்தில் சிகிச்சை தொடங்குதல் மற்றும் பல்துறை மருத்துவ நிபுணர் இணைந்து வழங்கும் சிகிச்சை அணுகுமுறை ஆகியவையே சிறந்த சிகிச்சை பலனை பெறுவதற்கு முக்கிய காரணங்கள் ஆகும் என்றார்

மற்றொரு சிக்கலான வழக்கில் வீட்டு வேலை செய்து தனது வாழ்வாதாரத்தில் சிரமம் பட்டு வந்த 55 வயது உடைய பெண் ஒருவர் சுமார் 20 ஆண்டுகளாக இரு முழங்கால் லில் ஏற்பட்ட மூட்டுவாத பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு நாராயணா ஹெல்த் சிட்டியை அணுகினார். காலப்போக்கில் முழங்கால் வலி தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்து அன்றாட வீட்டு வேலைகளை செய்வதற்கே பெரும் சிரமம் ஏற்பட்டதுடன் அவரது வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை உருவானது இளமைப் பருவத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது வலது முழங்காலில் கடுமையான வடிவ மாற்றம் ஏற்பட்டிருந்தது

இதன் விளைவாக சிறிது சிறிய தூரம் கூட நடப்பது உடல் உழைப்பு தேவைப்படும். பணிகளை மேற்கொள்ளவும் மிகவும் கடினமாக இருந்தது முழுமையான மருத்துவ மற்றும் கதிரியக்க பரிசோதனைகளுக்கு பிறகு அவருக்கு சிக்கலான ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்படும் முதன்மை முழங்கால் மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது அதிநவீன ரோபோடிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செயற்கை மூட்டுகளை மிக துல்லியமாக பொருத்தியதோடு நோயாளியின் இயல்பான நடமாட்டத்தையும் அன்றாட செயல்பாடுகளையும் பாதித்திருந்த கடுமையான முழங்கால் வடிவ மாற்றத்தையும் வெற்றிகரமாக சரி செய்தனர்.

மேலும் நாராயண நகர் சிட்டியில் எலும்பியல் துறை ஆலோசகர் டாக்டர் பிரதாப் கூறுகை யில் ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை கூட மிக உயர்ந்த துல்லியத்துடன் மேற்கொள்ள உதவுகிறது அதே நேரத்தில் ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் மென்மையான திசுக்களை முடிந்தவரை பாதுகாக்கவும் இது வழி வகுக்கிறது இதன் மூலம் செயற்கை மூட்டுகளை மிகவும் துல்லியமாக பொருத்த முடிவதுடன் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வழி குறைவது நோயாளி விரைவாக நடமாட தொடங்குவது மறுவாழ்வு குறைவாக நடைபெறுவது மற்றும் நீண்டகால செயல் திறன் மேம்படுவது போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றது.


பல ஆண்டுகளாக கடுமையான வலி மற்றும் மூட்டு வடிவ மாற்றத்தால் அவதிப்பட்டு வந்த நோயாளிகளுக்கு அவர்களின் இயல்பாக நடமாட்டத்தையும் சுயசார்பு வாழ்க்கையும் மீட்டெடுத்து வழங்குவது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பத்தாயிரம் எழும்பியல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நாராயண ஹெல்சிட்டி மேம்பட்ட எழும்பியல் சிகிச்சைக்காக சிறப்புமிக்க மருத்துவ மையமாக தனது நிலையை மேலும் வலுப்படுத்தி வருகிறது மூன்று மாத அறுவை சிகிச்சை எழும்பியல் புற்றுநோய் சிகிச்சை விபத்துக்காக சிகிச்சை மற்றும் சிக்கலான மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மருத்துவ நிபுணத்துவம் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறையை இணைத்து நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை பலன்களை வழங்குவதில் நாராயண ஹெல்த் சிட்டி மருத்துவம் மனை தொடர்ந்து முன்னிலை வைத்து வருகிறது என இரு டாக்டர்கள் பேட்டி இன் போது கூறினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *