ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம் நீட் வினாத்தாள் கசிவை கண்டித்தும் தர்மேந்திர பிரதான் பதிவேலக வலியுறுத்தியும் போராடிய மாணவர்களை வழக்குப்பதிவு ரத்து செய்ய வலியுறுத்தியும் உயிரிழந்த மாணவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் நேற்று 25-7-2026 நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத் தலைவர் குப்பன் தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் தனுஷன், திராவிடர் கழக கலை இலக்கிய துறை மாநிலச் செயலாளர் மாரி கருணாநிதி, திமுக மாணவர் அணி மாவட்ட துணை செயலாளர் சுஜித் இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் கவிநிலவன் திராவிடர் கழகம் ராஜேஷ் சிலம்பரசன் ஆகியோர் போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ரவி கண்டன சிறப்புரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.