காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயம் அடுத்த ஊதியூர் அருகே, அலங்கார வளைவில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
உடுமலை பகுதியில் இருந்து காங்கயம் நோக்கி, திங்கள்கிழமை மதியம் 12 மணியளவில், ஒரு கார் வந்து கொண்டிருந்தது. ஊதியூர் அடுத்த சாலையோரத்தில் இருந்த அலங்கார வளைவு மீது எதிர்பாராதவிதமாக இந்தக் கார் மோதி, விபத்துக்குள்ளானது. இதில், கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு, காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்து ஊதியூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.